கொரோனா அனர்த்தத்திற்காக தேர்தலை தொடர்ந்தும் ஒத்தி வைக்க வேண்டாம்

நாட்டில் பயங்கரவாத யுத்தம் நிலவிய காலத்திலும் தேர்தலில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் குண்டு தாக்குதல்களில் கொல்லப்பட்ட போதும் நாட்டில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதில்லை என்பதால் கொரோனா அனர்த்தத்திற்காக தேர்தலை தொடர்ந்தும் ஒத்தி வைக்காமல் ஜூன் 20ல் அரசு தேர்தலை நடத்த வேண்டும் என உலமா கட்சி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி காரியாலயத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு சனிக்கிழமை(25) இரவு இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது பற்றி மேலும் குறிப்பிட்டதாவது தேர்தலை நடத்துவதில் எந்த சிக்கலும் இருக்காது.கடந்த 5 நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கு இரவு 8 மணி வரை தளர்த்தப்பட்டு மக்கள் ஓரளவு இயல்பு வாழ்க்கையை கண்டனர்.தொழிலுக்கு போவோர் தொழிலுக்கு சென்றனர். பொருள் கொள்வனவு செய்வோர் சமூக இடைவெளியில் நின்று அதனை செய்தனர். எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. இதே போல் தேர்தல் தினத்தன்றும் சமூக இடைவெளியில் அணிவகுத்து நின்று வாக்களிப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது. அதே போல் கட்சிகள் பொது கூட்டங்கள் வைப்பதை தவிர்த்...